1., நம் இயல்புக்கு ஏற்ப, சூழ்நிலைக்கு தகுந்த எண்ணங்கள் நம்முள் ஏற்பட்டே தீரும்.
2. அந்த எண்ணங்கள் வந்து சென்ற பிறகு தான் நமக்கு வந்துள்ளதாக எண்ணுகிறோம். நாம் உணரும் எந்த எண்ணமும் கடந்து சென்று விட்ட எண்ணமே.
3. நம்மை கடந்து சென்று விட்ட எண்ணத்தை அது வரக்கூடாது, இப்படி இருக்க வேண்டும் என நிர்வாகம் பண்ணுவது வீண்வேலை .
4. பல்வேறு எண்ணங்கள் ஏற்படுவது இயல்பு. அதில் புற செயலுக்கு எது தேவையோ, அதை மட்டுமே சிந்தித்து செயல் ஆற்றுங்கள்
5. எண்ணம் Thought என்பது வேறு
சிந்தனை Thinking என்பது வேறு.
தாமாக தோன்றும் எண்ணத்தை (Thought), நாமாக தான் அதன் மீது எறி சவாரி செய்து சிந்தனையாக (Thinking) ஆக மாற்றி விடுகிறோம்.
எண்ணத்தை Thought ஐ, சிந்தனை யாக (Thinking) ஆக மாற்றுவது நாம் தான்.
உங்களை அறியாமல் ஏற்பட்டால் அது எண்ணம். நீங்கள் அறியாமல் இருக்கும் வரை அது எண்ணம்.
எப்போது உங்களுக்கு தெரிகிறதோ அப்போது அது Thinking. அப்போது அதை விட்டு விடுங்கள்.Thinking ஐ தான் நம் கட்டுப்பாட்டில் இருக்கும்.
எண்ணத்தை பிடித்து தொங்கமல் இருக்க நீங்கள் செயலில் கவனம் செலுத்துங்கள்.
செயலில் கவனம் செலுத்தும் போது செயலுக்கு உதவியாக ஏற்ற எண்ணங்களே ஏற்படும். செயலில் கவனம் தவறும் போதே வேறு எதோ எண்ணத்தை பிடித்து தொங்கி கொண்டு இருப்போம்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக