அழகு
இயல்பாய் இருப்பது தான் அழகு . ஈர்ப்பு .
குழந்தைகள் இயல்பாய் சிரிக்கும் போதும் நடந்து கொள்ளும்போதும் அழகுதான் . அதன் இயல்பான அழுகையும் அழகு தான் .
வேட்டையாடும் சிங்கமும்
பயந்து ஒடும் மானும்
படம் எடுத்து ஆடும் பாம்பும் அதன் இயல்பில் அழகாய் இருக்கும் .
இயல்பில் இருப்பது தான் அழகு .
இயல்பில் இருப்பது தான் ஈர்ப்பு
இயல்பில் இருப்பது தான் ஒழுக்கம்
இயல்பில் இருப்பது தான் சுதந்திரம்
இயல்பில் இருத்தல் விடுதலை
இயல்பில் இருப்பது தான் சும்மா இருத்தல் .
இயல்பில் இருப்பது நிகழ் காலத்தில் இருப்பது .
இயல்பில் இருப்பது தான் சாட்சி தன்மையில் இருத்தல்.
இயல்பொடு முரண்பட கூடாது என்ற புரிதலே ஞானம் . இயல்பொடு ஒத்து போதலே சரணாகதி.
இயல்பில் இருக்க முயற்சி/பயிற்சிகள் எதும் தேவை இல்லை .
முயற்சிகள் அனைத்தும் இயல்புக்கு முரணானது.
அக முயற்சிகள் அற்ற நிலையில் நாம் இயல்பில் தான் இருக்கிறோம்.
இயல்பு அனைவருக்கும் ஒன்றானது அல்ல . ஒவ்வொருவரின் இயல்பும் வேறுபட்டு இருக்கும் .
இயல்பில் செயல்படும் போது நாம் மெய் பொருளின் இயக்காமாய் இருப்போம் .
இயல்பில் இருக்கும்போது நம் ஆற்றல் 100% வெளிப்படும் .
இயல்பில் total mind செயல்பாட்டில் இருக்கும் . Concious mind முக்கியத்துவம் இன்றி இருக்கும் .இயல்பில் இருக்கும் போது Concious mind ம் total mind உடன் இணைந்து நிலையில் செயல்படும் .
இயல்பில் இருக்கும் போது கர்மாக்கள் தொடர்வது இல்லை .
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக