துறவறம் பற்றி காண்போம்
தீராத குடும்ப பிரச்சனையில் இருந்து தப்பிப்பதற்கு கூறாமல் சன்னியாசியாதல்தான் இது விபரீத முடிவு மட்டுமல்ல. வியர்தனமான அசட்டுத்தனமான முடிவு இதற்குப் பெயர்தான் Escapism.
ராமகிருஷ்ணர் மற்றும் பல மஹான்கள் வாழ்வில் பார்க்காத கஷ்டங்களை அவர்கள் சன்னியாசியாக போகலையே. சவால்களை சந்தித்து அதை ஜெயித்தார்கள் இந்த பீடிகை எதற்கு என பலர் நினைக்கக்கூடும் எல்லாம் காரணமாகத்தான் என்று கேட்கிறீர்களா, கூறுகிறேன்.
ஒரு நாள் நம் யோகிராஜ் இல்லாத வாசிகளுக்கு உபதேசம் செய்து விட்டு சற்று ஓய்வாக இருந்த பொழுது அவரது அணுக்கத் தொண்டர் கௌரி பந்தோ பாத்யாயா தயக்கத்துடன் நெருங்கினார் அவர் தான் பிற்காலத்தில் சேசலானந்த பிரம்மச்சாரி என்று பிரபலமானார் அவருக்கு குடும்ப பிரச்சினையால் யோகா சாதனை புரிவது கஷ்டமாக இருப்பதாக நினைத்தாள் அதனால் இல்லறத்தைத் துறந்து ஓடி விடுவது என முடிவு செய்து கொண்டார் அதற்கு முன்பு குருதேவரிடம் அனுமதி பெற்று சன்னியாசம் பெறுவதே உரிய முறை என்பதால்தான் நெருங்கினார் பணிவாக குருதேவரை எனக்கு ஆன்மீக சாதனைகள் புரிவதற்கு இல்லாத சூழல் ஏற்றதாக இல்லை அதனால் சன்னியாசியாக போய்விடலாம் என நினைக்கிறேன் தாங்கள் தயவுசய்து உத்திரவு அளிக்க வேண்டும் என விண்ணப்பித்தார்.
நமது சனாதன சாஸ்திரத்தின்படி சன்னியாசம் என்பது நான்காம் நிலை பிரம்மச்சரியம், கிரகஸ்தாஸ்ரமம், வானப்பிரஸ்தம் பின்புதான் சன்னியாசம். அதாவது சன்னியாசம் என்பது ஞானத்தில் பழுத்து, செழித்து, அழுக்காறு, அவா ,வெகுளி, இன்னாச்சொல் என்ற நிலைகளை கடந்து மனது முழுமையும் முதிர்ச்சியும் பெற்ற பிறகு பெறுகின்ற உன்னத நிலை.
நாம் பலரும் நினைப்பது போல துறவறம் எனில் இல்லத்தை மற்றும் சுற்றத்தை துறந்து கானகம் செல்ல வேண்டும் என்பது அல்ல சுருக்கமாக சொல்லப்போனால் தன்னலத்தை துறந்து மண்ணுலகத்தில் தன்னை எந்த எதிர்பார்ப்பும் இன்றி கிடத்தல் சன்யாசம் ஆகும்.
சன்யாசம் பற்றி அர்த்தசாஸ்திரம் பகவத் கீதை மற்றும் திருக்குறள் போன்ற ஞான சாதனங்கள் என்ன போதிக்கின்றன என்பதை பற்றி சுருக்கமாக மனதில் சிந்தித்துப் பின்புதன் நமது யோகி ராஜரின் ஞானப் பொழிவை பதிவாக கொடுக்கிறேன்.
எனது சிற்றறிவினை கூர்மைப்படுத்தி வேதங்களிலே சன்யாசம் பற்றி ஏதேனும் கருத்து உள்ளதா. சன்னியாசம் பெற்ற வேதரிஷிகள் சுட்டப்பட்டுள்ளனரா.எனத் தேடித் தேடிப் படித்தேன் என் அறிவிற்கு எட்டியவரை சன்னியாசம் பெற்ற ரிஷிகள் என எவரையும் குறிப்பிடப் பட்டதாகத் தெரியவில்லை ராமன் வனவாசம் சென்று சந்தித்த எல்லா ரிஷிகளும் இல்லறம் நடத்தி அவர்களாக சுற்றம் சூழ தான் இருந்திருக்கிறார்கள்.
பரத்வாஜர் ஆக இருக்கட்டும் மற்றும் அத்திரி என்ற அளவிலே கருதப்பட்டதால் கொண்டதாகவோ தெரியவில்லை மாறாக அவர்கள் அனைவரும் இல்வாழ்க்கையை சிறந்த நல்லறமாக கடை பிடித்திருக்கிறார்கள் அதன் மூலம் இறை அனுபூதி உற்று அதை சகலருக்கும் அருள் இருக்கிறார்கள்.
ரிக் வேதம் நான்காம் மண்டலத்தில் அருளப்பட்ட மந்திரங்கள் பெரும்பான்மையானவை கௌதம முனிவருக்கு உபதேசிக்க பட்டது என்றும் சபிதா குறித்து அருளப்பட்ட மந்திரங்களை முனிவரின் மகன்
ஷ்யாவஷல முனி வருக்கு அருளப்பட்டது என்றும் மண்டலம் 765 மந்திரங்கள் இவை இந்திரனுக்கு அளிக்கப்பட்ட விளக்கங்கள் அனைத்தும் பரத்வாஜ முனிவருக்கும் அவருடைய குடும்பத்தினருக்கும் சொல்லப்பட்டது என்றே பதிவு செய்யப்பட்டுள்ளது வேதங்களும் அதன் சாரமாகிய உபநிஷதங்களும் பரமாத்மனால் ரிஷி களுக்கும் இறை அனுபூதி பெற்றவர்களுக்கும் வெளியிடப்பட்டது சொல்லப்பட்டிருக்கின்றன அன்றி துறவி என்ற பிரிவினருக்கு சொல்லப்பட்டது என கூறப்படவில்லை
பகவத் கீதையின் ஐந்தாம் அத்தியாயத்தில் சன்னியாசம் பற்றி பேசப்படுகிறது ஆனால் அந்த சன்னியாசம் இல்லறத்தை துறந்து கானகத்திற்கு வேறு புதிய கண்காணாத இடத்திற்கு செல்வதை பற்றியல்ல கருமம் புரியாது இறை நிலையிலே மட்டும் நினைவுகளை குவிக்கின்ற நிலை ஆனால் பகவத் கீதை உயர்ந்தது என்று ஏற்றுக் கொள்ளவில்லை கர்ம யோகத்தை தான் உயர்ந்தது என சொல்லியிருக்கிறார் அதற்குண்டான உபதேசங்களை சுருக்கமாக காணலாம்.
கர்ம சன்னியாச சாங்கியம் என்ற சொற்களிலும் பகவத் கீதையில் பயன்படுத்தப்படுகிறது கர்ம யோகம் யோகம் என்ற சொல்லிலும் பயன்படுத்தப்படுகிறது கர்ம சந்நியாச யோகம் ஆகிய இரண்டும் சிறப்பைத் தரும் எனினும் கரும சன்னியாச அதைவிட கர்ம யோகமே மேலானது வெறுப்பும் விருப்பும் இல்லாதவன் நித்ய சன்னியாசி எனப்படுகிறான்
கர்ம யோகம் புரியாது கர்ம சன்னியாச புரிதல் எளிதன்று கர்ம யோகம் செய்யும் முனிவனும் விரைவில் பிரம்மத்தை அடைகிறான் என்கிறார் கண்ணபிரான் யோகம் என்றால் என்னவென்று சந்திப்பின் லாபம் நஷ்டம் சுகம் துக்கம் வெற்றி தோல்வி போன்ற இருமைகளில் தன்னை இழக்காது நடுநிலையில் விளங்கி நித்திய சந்தோஷமாய் இருப்பவனே யோகி எனப்படுவான் அவர்கள் தங்களை மையமாக வைத்து எச்செயலையும் செய்யமாட்டார்கள் தர்மத்தையே குறிக்கோளாகக் கொண்டு கருமம் புரிவார்கள் அப்பேர்பட்ட யோகிகள் கருமம் புரியணும் கர்ம பந்தம் அவர்களை தீண்டாது
பின்பு கண்ணபிரான் சாங்கிய யோகத்தில் 48வது ஸ்லோகத்தில் தனஞ்சய யோகத்தில் நிலைபெற்று பற்றற்று வெற்றி தோல்விகளை சமமாக கொண்டு கருமம் செய் நடுநிலையே யோகம் என சொல்லப்படுகிறது என்கிறார் இதிலிருந்து பகவத் கீதையிலும் துன்பங்களுக்கும் குழப்பங்களுக்கும் அன்றே இல்லறத்தை துறந்து தப்பித்துக் கொள்வதற்கு ஒரு மார்க்கமாக துறவறத்தை கைக்கொள்ள அங்கீகாரம் அளிக்கப்பட்ட தெரியவில்லை தர்மத்தை மையமாகக்கொண்டு உறங்காமல் சுருங்காமல் பணியாற்றுதல் எல்லா ஜீவர்களின் கடமை என பிரகடனம் செய்கிறார்கள் தாயின் அனுமதி பெற்று சன்னியாசம் பெற்ற ஆதிசங்கரர் இறுதிவரை ஞான வேள்வி நடத்திக் கொண்டுதானே இருந்தார் நமது பரமாச்சாரியாரும் ரமணமகரிஷியூம் யோகிராஜர் மகாயரும் பரமஹம்சரும் இறுதிவரை பல இடங்களில் பொது வாழ்விலிருந்து தப்பிக்க நினைக்கவே இல்லையே
கிமு மூன்றாம் நூற்றாண்டில் சாணக்கியர் ஆல் இயற்றப்பட்ட அர்த்தசாஸ்திரத்தில் குழப்பங்களுக்கும் இல்லறத்தை எழும் பிரச்சினைகளுக்கும் பயந்து ஓடுகிற துறவு நிலை பற்றி என்ன கூறப்பட்டுள்ளது என காணலாம்.
மனக் குழப்பத்தில் இருந்து விடுபட பயன்படும் மனைவிக்கும் அவனுக்கும் பிறந்த பிள்ளைகளுக்கும் வாழ்க்கைக்கு வசதிகளை செய்து கொடுக்காமல் சன்னியாசம் செல்பவனுக்கு அதிக வட்டி அபராதமாக 250 பொற்காசுகள் அபராதம் விதிக்கப்படும் பெண்ணுக்கு சந்நியாசம் கொடுத்து வீட்டைவிட்டு வெளியேற்ற பவனுக்கும் இதேபோன்று அபராதம் விதிக்கவேண்டும் இல்லற வாழ்விற்கு தகுதி இழந்த வயதானவன் நீதிபதிகளின் அனுமதியின் பேரில் சந்நியாசம் மேற்கொள்ளலாம் அன்றி வேறு வகையில் சன்னியாசம் மேற்கொள்ளக்கூடாது .
வானப்பிரஸ்தர்களை தவிர மற்ற ஆசைகள் புத்த துறவிகள் சமணர்கள் புதிதாக ஏற்படுத்தப்படும் கிராமங்களிலோ எல்லோரும் ஒரு காரணத்திற்காக ஓரிடத்தில் சேர்ந்திருக்கும் சமுதாயத்திலும் வசிக்கக் கூடாது.
மேலே குறிப்பிடப்பட்டுள்ள விதிமுறைகள் தீவிர சனாதன கௌடில்யர் என்னும் சாணக்கியரின் கட்டளைப்படி மௌரிய சாம்ராஜ்யத்தின் அரசகட்டளை இதிலிருந்து புரிந்து கொள்ள வேண்டியது என்னவென்றால் நமது இந்துதர்மம் வேதங்களே அன்றே சாத்திரங்களும் தப்பித்துக் கொள்வதற்காக மேற்கொள்ளப்படும் அதை ஏற்றுக்கொள்ளவில்லை.
ஆதிசங்கரரும் கோவிந்ததில் கூறியிருக்கிறார் ஒருவன் சித்தரித்து ரிஷி போல் வேஷம் போடுகிறான் ஒருவன் மொட்டை அடித்துக் கொள்கிறான் மற்றொருவன் தலை மயிரைப் பிடுங்கி எறிகிற இன்னொருவன் காஷாயத்தை அலங்காரமாக உடுத்திய எல்லோரையும் மயங்க செய்கிறான் இந்த மூடர்கள் கண்ணிருந்தும் உலகம் பொய்யான அழிவதில்லை இதிலிருந்து மகான்கள் தப்பித்துக் கொள்வதற்காக துறவி வேஷம் போட்டு ஓடுபவர்களை ஏற்றுக் கொள்வதில்லை என்பதுதான் வாருங்கள் திருவள்ளுவரை தரிசனம் செய்துவிட்டு யோகியாரின் உபதேச மாலை அனுபவிக்கலாம் வள்ளுவப் பெருந்தகை துறவறத்தை இதோடு ஒப்பிடுகையில் நற்றன்று என்ற அறிவுரையை கூறுகிறார் இல்வாழ்க்கை என்ற அதிகாரத்தில்
என்றும் அறஇயல்பினால் இல்லற வாழ்க்கை நடத்துபவன் என்பவன் பிற வழிகளில் வாழ முயற்சி செய்வார் எல்லோரிலும் மேன்மை உடையவன் என்றும் கூறுவர்.
மேலும் மற்றொரு குறளில் மனைவியோடு கூடிய சிறந்த வாழ்க்கை நடத்துபவன் அறிஞர்கள் சான்றோர்கள் மற்றும் துறவிகள் ஆகிய அனைவருக்கும் உற்ற துணை என கூறுவார் மேலும் தவம் என்ற தலைப்பில் தவம் செய்தல் என்பது முன் பிறவியில் நல்வினை செய்தார் கே அமையும் அந்த நல்வினை இல்லாதவன் தவத்தை மேற் கொள்வது வீண் முயற்சியே என்பார் மேலும் துறவு என்ற தலைப்பிலே அதிகாரத்தின் நிறைய குரலாக துறை வேனில் பற்றில்லாத இறைவன் மேல் பற்றி கொள்ளுதல் ஆகும் என்ற இதைத்தான் பாபாஜி மகாசயர் மற்றும் எல்லா மகான்களும் செய்தார்கள் இதுதான் உண்மை துறவறம் மேலே விவரித்துள்ள அத்தனை விஷயங்களும் அறிந்த ஞான விருட்சம் நமது யோகிராஜ்ர் தான் . நம் உள்ளத்தே நமக்கு வரும் நிகழ்ச்சி அப்படியே பதிவு செய்கிறேன் முதலில் அனைத்தையும் செவிமடுத்த மகாசாயர் சிரித்தார் பிறகு சொன்னார் என்னை கௌரி உன்னுடைய பூணூலின் பலம் அதிகமாக ?அன்றி சடையின் பலம் அதிகமா? நீ சாதுவை போல உன்னையே விளம்பரப்படுத்திக் கொள்ள பார்க்கிறாயா? ஜனங்கள் முளைத்தால் பணம் சம்பாதிக்கலாம் என்று விரும்புகிறாயா? இதோ பார் காவி உடை அணிவதால் ஜனங்கள் சாதுவாகி விடலாம் என்றால் கழுதை குதிரை கூட சாதுவாகிவடலாம் அவை நிறமும் காவி நிறம் தான் ஆனால் அவை சாதுக்கள் என அழைக்கப்படுவதில்லை இதைப்போன்ற பைத்தியக்கார எண்ணத்தை எல்லாம் விட்டு விட்டு சுயமாக எவ்வளவு சம்பாதிக்கிறோம் அதை வைத்து வாழ்க்கையை நிர்வாகம் செய் மற்றவர்களிடம் தானம் பெற்ற மனம் என்னும் யாத்திரையை நிர்வாகம் செய்யாதே என்றார்.
இந்த புத்திமதி அந்த சிற்பியை இருக்கு மட்டும்தானா அந்த ஞான உபதேசம் எல்லோருக்கும் தான் சொல்வது சரிதானே உன் பாத பங்கஜம் தேகிஎன்றே சரணடைந்தேன் அருள்பரிவாய்.....
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக