திங்கள், 13 ஜூன், 2022

இயற்கை வழங்கிய உணவே நல்லது

 







இயற்கை வழங்கிய உணவுகளே நம் உடலை பாதுகாக்கும்

நாம் எல்லோரும் நோயில்லாமல் வாழ ஆசைப்படுகிறோம். ஆனால் அதிகப்படியான மக்கள் பல நோய்களும் உடல் பலத்துடனும் சுமார் 500 ஆண்டுகளுக்கு முன்பு வாழ்ந்த மக்கள் நோயில்லாமல் வாழ்ந்தார்கள். அன்று அவர்களுக்கு கிடைத்த உணவுகள் அனைத்துமே உடல் நலத்தை பாதுகாத்து அன்று அவர்களுக்கு இயற்கை வழங்கிய உணவுகள் மட்டும் தான் கிடைத்தது. இன்று இயற்கைக்கு எதிராக ஆயிரக்கணக்கான உணவுகளை கண்டுபிடித்துவிட்டார்கள். அதனால் நூற்றுக்கணக்கான நோய்கள் வந்து விட்டது. இன்று நாமும் நோயில்லாமல் வாழ வேண்டுமானால் இயற்கை மருத்துவத்தை நாடவேண்டும் சர்க்கரை நோய் ஆண்மை குறைவு நரம்புத் தளர்ச்சி உடல் பலவீனம் உடல் உஷ்ணம் தம்பதிகளின் உறவு பிரச்சனைகள் பெண்களின் உடல் சம்பந்தப்பட்ட நோய்கள் குழந்தை இல்லாமை நோய் குடல் புண் உடல் வலி உடல் பருமன் மற்றும் அனைத்து நோய்களையும் இயற்கை மருத்துவம் குணமாக்குகிறது அது எப்படி என்றால் இயற்கை அன்னை வழங்கும் உடலுக்கு நலம் தரும் உணவு வகைகளை  தினமும் சாப்பிட்டால் எந்த நோயும் வராது


இயற்கை தானாகவே உருவாகியது இயற்கையை யாரும் உருவாக்கவில்லை உருவாக்கவும் முடியாது உருவாக்கினார்கள் என்று சொல்வார்கள் அவை அனைத்தும் கற்பனை கதை பூமியில் பல வகையான உயிரினங்களை படைத்து அவர்களுக்கு தேவையான  உணவுகளையும் வாழ்க்கைக்கு தேவையான அனைத்து வசதிகளையும் கொடுத்திருக்கிறது

தேனி வண்ணத்துப்பூச்சி தேன் சிட்டு உயிர்களுக்கு தேன் மட்டுமே உணவு. மண்புழுக்களுக்கு மன் மட்டுமே உணவு. சிங்கம் ,புலி, சிறுத்தை, நரி, ஓநாய் இவைகளுக்கு மாமிசம் மட்டுமே உணவு. ஆடு மான் மாடு யானை குதிரை முயல் போன்றவைகளுக்கு புல் மட்டுமே உணவு இப்படி ஒவ்வொரு உயிரினங்களுக்கும் ஒவ்வொரு வகையில் உணவை இயற்கை வழங்கிக் கொண்டிருக்கிறது.

இயற்கை தத்துவத்தின் படி மனிதர்கள் பூமியில் விளையும் உணவுகளை மட்டும் தான் உண்ண வேண்டும். காய்கள் ,கீரைகள், பழங்கள், தானியங்கள், பயறு வகைகள், தேங்காய் இத்துடன் இன்னும் சில உணவுகளும் உண்டு இவை அனைத்தும் தான் மனித உணவுகள். இந்த உணவுகளைத் தான் பழங்கால மனிதர்கள் சாப்பிட்டு உடல் நலத்துடனும் ஒற்றுமையுடனும் அன்பை பரிமாறி வாழ்ந்தார்கள் மனிதனை மனிதன் நேசித்து வாழ்ந்தான்.

மனித உடலுக்கு நலம் தரும் உணவுகளையும் ஆறு சுவைகள் கொண்ட பல வகை மூலிகைகளையும் நாம் இயற்கை அன்னை அவர்கள் நமக்கு தேவையான அளவு வழங்கிக் கொண்டிருக்கிறார்கள் நாம் தினமும் பயன்படுத்தினால் எல்லாம் நோய்களிலிருந்தும் விடுதலை அடைந்து உடல் நலத்துடனும் உடல் பலத்துடனும் அதிக ஆண்டுகள் வாழலாம் . இன்றைய நாகரிக வாழ்வில் அதிகமானவர்கள் பல வகையான நோய்களும் உடல் பலத்துடனும் தான் வாழ்ந்து கொண்டிருக்கிறார்கள் இன்று உடல் பிரச்சனைகள் எல்லா வயதினருக்கும் இருக்கிறது நோய்கள் உள்ள உடல் நோயில்லா உடலாக மாறவேண்டுமானால் உடல்நலம் பாதிக்கப்பட்டவர்கள் இயற்கை உணவு எடுப்பது தான் சாலச் சிறந்தது

இயற்கை என்னும் இறைவன் அவர்கள் மனிதர்களை பூமியில் விளையும் உணவுகளை மட்டுமே உண்ணும் படியாக உடலையும் உள்ளுறுப்புகளையும் வழங்கியிருக்கிறார்கள் பூமியில் விளையும் இயற்கை உணவுகளையும் நாம் சமைத்து உண்ணும் சைவ உணவுகளையும் சரியான முறைப்படி சாப்பிட்டு வாழ வேண்டும்.

மாட்டுப் பால் பால் பொருட்கள் மாமிச வகைகள் மீன் முட்டை கருவாடு இவை அனைத்தும் பூமியில் விளையவில்லை மனித உணவும் இல்லை மேலே சொன்ன உணவுகள் அனைத்தும் வேறு வகையான உயிரினங்களின் உணவுகளாகும்

இயற்கை தத்துவத்தின்படி நலம் தரும் உணவுகளை மட்டும் சாப்பிட்டு என்றும் நோயில்லா உடலுடன் வாழ வேண்டுகிறேன். நன்றி வணக்கம்

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

Garlic's Healing Powers: A Closer Look at Ayurvedic Wisdom

 Garlic's Healing Powers: A Closer Look at Ayurvedic Wisdom Consuming garlic on an empty stomach is believed to offer numerous health be...