நல்லவை நாற்பது தொடர்ச்சி
21. அப்புறம் இல்லாமல் சொல்லும் விஷயங்கள் இருப்பதாகத் தான் இருக்கும். உதாரணம் காட்டி சொல்பவைகள் உண்மையாக இருக்கும். உண்மை கேட்பவர்கள் மனதில் பதிந்துவிடும்.
22. திக்கற்ற முதியோரை காத்திடுங்கள். அதுவே முக்தி பெற வழி என்று நம்பிவிடுங்கள்.
23. உயிரை விட்ட உடனே உடலைச் சுட்டெரித்து விடுவார்கள் சுற்றத்தார்.
ஆகவே இருக்கும் வரை இறைவனை நினைத்துக் கொண்டே இருங்கள்.
24. தாய் சொல்லித்தான் தந்தையை அறிகிறோம். குரு காட்டித்தான் தெய்வத்தை காண முடியும். ஆகவே குருவை நாடுங்கள்.
25. வாழ்க்கையை சாசுவதம் என்றெணணி,பசித்தவருக்கு ஒரு பிடி அன்னம் கூட அளிக்காமல், எமன் வரும்பொழுது வருந்தி என்ன பயன்?
26. செல்வம் வரும் பொழுது நிதானமாய், அடக்கத்துடன் நடந்து, முடிந்த வரை இல்லாதவருக்கு உதவுங்கள். துன்பம் வரும்போது இறைவனிடம் சரண் அடையுங்கள்.
27. மாயையான உலகில், இருப்பது பொய், போவது மெய் என்றெண்ணி, ஒருவருக்கும் தீங்கு எண்ணாதீர்கள்.
28. அன்பினால் தர்மம் பிறக்கிறது. தர்மத்தினால் தியாகம் பிறக்கிறது. அன்பும், சேவையும் தான் மனித குலத்தின் உயிர்நாடி.
29. இல்லாதவர்களுக்கு உதவி செய்வதுதான், நீங்கள் இறைவனுக்கு படைக்கும் நைவேத்தியம் ஆகும்.
30. மனிதன் பற்றுகின்ற பொருள்களெல்லாம் அவனைப் பற்றிக் கொள்ளும் . பற்றை விட்டுவிடுங்கள். பற்றியவை பற்று அற்று போய்விடும்.
31. ஏளனம் செய்வது எளிது. ஆனால் ஏளனம் என்றும் ஏளனம் செய்தவரையே ஏளனப்படுத்தும். ஆகவே நாக்கிற்கு சிரமம் கொடுக்காதீர்கள்.
32. அன்பை கற்றுக் கொள்ளுங்கள். நீங்கள் மற்றவர் மீது அன்பு செலுத்தினால் தான் வாழ்வை கற்றுக்கொள்ள முடியும்.
33. அதிகம் பேசுவதை தவிர்த்து விடுங்கள். ஆயிரம் சொற்கள் பேசுவதைவிட ஒன்றே ஒன்று உண்மைக்காக பேசுவது சிறந்தது.
34.காலச் சக்கரத்தின் அச்சு தான் கடவுள். வெளி விளிம்பில் இருந்து அச்சை நோக்கி நகருங்கள். காலம் உங்களை சுற்றி சுழற்றும்.அப்போது நீங்கள் காலத்தோடு சேர்ந்து சுழல மாட்டீர்கள்.
35. இளமையின் வேகத்தில் இன்றுஆட்டம் போடுபவர்கள், நாளை முதுமையில் தோல் சுருங்கி அழ போவதை மறந்து விடுகிறார்கள். ஆகவே எல்லா நிலைகளிலும் அமைதியாக இருக்க பழகிக் கொள்ளுங்கள்.
36. கடவுளிடம் சங்கமமாகும் வாழ்க்கை வேறு வேறு வடிவங்களில் தொடர்ந்து கொண்டே இருக்கும். ஆகவே கடவுளோடு சங்கமமாகும் வழியை தேடுங்கள்.
37. தன்னிடம் இருப்பதை தவறாகப் பயன்படுத்துபவன் ஏழை. அதை சரியாக பயன்படுத்த பவனே செல்வந்தன்.
38. புகழைப் பெறுவதிலும், கொடுப்பதிலும் எச்சரிக்கை தேவை. தகுதியும், உண்மையும் இருந்தாலும் கூட புகழின் வார்த்தைகளில் செவிடாகவும் ,ஊமையாகவும் இருப்பது நல்லது. ஏனெனில் அது அகங்காரத்தில் வழிவகுத்துவிடும்.
🙏 நன்றி நன்றி நன்றி🙏
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக