மகா அவதார் பாபாஜி
நல்லவை நாற்பது
1. மௌனம் இறைவனின் மொழி. பணிவு, அமைதி, மவுனம் ஞானத்தின் அறிகுறிகள். ஆகவேதான் ஞானிகள் அதிகம் பேசுவதில்லை.
2. எது வந்தாலும் அதை ஆண்டவனின் விருப்பம் என ஏற்றுக் கொள்க. எது சென்றாலும் அதுவும் ஆண்டவனின் விருப்பமே என ஏற்றுக் கொள்க. எதையும் ஒன்றாக என்னும் சமநிலை பக்குவம் வந்து விட்டால் எந்த கஷ்டமும் நம்மை பாதிக்காது.
3." நான்" என்ற அகங்காரத்தில் இருந்து நீங்கள் விடுபட்டு விட்டால் உங்கள் மனம் தூய்மை அடைகிறது. அதன் மூலம் மேலான மெய்யறிவை இறை உணர்வை உணருவதற்கு தயாராகிறார்கள்.
4. தோல்வி ஒவ்வொன்றும் வெற்றி படியாகவும் அதேபோல் நாம் செய்யும் தவறுகளும் வாழ்க்கையை திருத்திக்கொள்ளும் படிகட்டாகும்.
5. தினமும் இரவு உறங்கச் செல்லும் முன் அன்று நடந்த நிகழ்ச்சிகளை நினைத்துப் பாருங்கள். தவறு செய்திருந்தால் ஆண்டவனிடம் மன்னிப்பு கேளுங்கள். நல்லவை செய்திருந்தால் அதன் பலனை ஆண்டவனுக்கு அர்ப்பணித்து விடுங்கள். இது உங்களை நீங்களே ஆத்ம பரிசோதனை செய்வதாகும்.
6. உண்மையான அன்பு என்பது, கொடுப்பது மட்டுமே. அங்கே வியாபாரமோ, பரிமாற்றமோ கிடையாது.
7. தவறு செய்யாத மனிதன் இல்லை. உணராதவன் மனிதனே இல்லை.
8. தியானம் செய்யுங்கள். அது சீக்கிரமே உங்களை எல்லாவிதமான துக்கத்தில் இருந்தும் விடுபட வைக்கும்.
9. மலைகளில் மலைவாழ் மக்கள் பலர் வாழ்கிறார்கள் அவர்களுக்கு எல்லாம் கடவுள் தரிசனம் கிட்டி விட்டதா? என்றால் இல்லை. ஆகவே, ஞானத்தை அசைவற்ற மழையிடம் இருந்து தெரிந்து கொள்வதை விட ஓர் ஆத்ம ஞானம் இருந்து அதாவது ஒரு குருவிடமிருந்து தெரிந்துகொள்வது தான் மிகவும் நல்லது.
10. சதையும் எலும்பும் கூடிய கட்டான உடல் தான் நீ என்று எண்ணிவிடாதே அது ஒரு துன்பக் கூடு தவிர வேறன்று.
11. தன்னை அறிந்தவன் மரணத்தையும் அறிகிறான். அவன் கட்டளையிட்டால் தான் மரணம் அவனிடம் நெருங்க முடியும்.
12. நம்பிக்கையாலும், பக்தியாலும் மட்டுமே தெய்வீகக் காட்சிகளைக் காணும் நிலை கிடைக்கும்.
13. மனம் சஞ்சலப்பட்டு அலைமோதும் வரையில் அதில் ஆத்மாவின் தெளிவான பிம்பத்தை காண முடியாது. ஆகவே அமைதியை நாடுங்கள்.
14. அகத்தில் இருக்கும் ஆண்டவனை அறிந்தால் தான் அவரை புறத்திலும் காண முடியும்.
15. மனம் சுத்தமாக இருந்தால் அதை இறைவன், தான் குடியிருக்கும் கோயிலாக ஏற்றுக் கொள்கிறான்.
16. இன்பம் வரும்போது அதனால் கிடைக்கும் பலன்களை ஆண்டவனுக்கு அர்ப்பணித்து விட்டால், துன்பம் வரும்போது அந்த பாரத்தை அவனே தாங்கிக் கொள்வான்.
17. இறந்த பின்னே எதுவுமே கூட வராது. நாம் செய்த புண்ணியம் பாவம் மட்டுமே கூட வரும்.
18. வாழ்க்கையில் வளர்ச்சி வரும்பொழுது அடக்கமும் வளர வேண்டும். இல்லையெனில் தூக்கி வைத்த பேசியவர்கள் எல்லாம், சிறு சருக்கம் வந்தாலும் கீழே தூக்கிப் போட்டு விடுவார்கள்.
19. சொந்தமும் பந்தமும் செல்வமோ எதுவுமே சாசுவதம் கிடையாது. இறைவனின் திருவடியே சாசுவதம்.
20. பிறவாமை வேண்டும் ஒருவேளை மீண்டும் பிறந்தால் உன்னை மறவாமை வேண்டும் என்று ஈசனிடம் வேண்டுங்கள்
தொடரும் ...
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக