ஞாயிறு, 19 டிசம்பர், 2021

நெல் அறிவோம்


 நம் நெல் அறிவோம்

பெருங்கார் நெல்

நாம் மறந்து போன

பாரம்பரிய நெல் வகைகளின் நன்மைகளை இந்த தலைமுறையினருக்கு அறிமுகப்படுத்த வேண்டும் என்ற நோக்கில் தினமும் ஒரு பாரம்பரிய நெல் இரகத்தின் அரிசியை பற்றி பதிவிட்டு வருகிறேன்.


அந்த வகையில் இன்றைய பதிவில் நாம் பார்க்க இருப்பது பெருங்கார் நெல் என்கிற பாரம்பரிய ரகம் நெல் பற்றி தான்.

பெருங்கார் (Perunkar) 

என்னும் இந்த நெல் வகை, 

ஒரு பாரம்பரிய நெல் வகையாகும். 

தமிழகத்தின், திருவண்ணாமலை மாவட்டத்தின், வந்தவாசி 

வட்டராத்தில் உள்ள "தக்கண்டராபுரம்" எனும் நாட்டுப்புறப் பகுதியில் முதன்மையாக விளையக்கூடிய இந்நெல் வகை, ஒரு ஏக்கருக்கு சுமார் 1400 கிலோ நெல் தானியமும், சுமார் 1500 கிலோ வைக்கோலும், மகசூலாக கிடைப்பதாக கருதப்படுகிறது.


குறுகியகால நெல் வகையைச்சார்ந்த நெற்பயிர்கள் சாகுபடி செய்ய ஏற்ற பருவகாலமான குறுவைப் பட்டம் எனும் இப்பருவத்தில், 120 நாள் நெற்பயிரான பெருங்கார் பயிரிடப்படுகிறது.


மேலும் சூன்,மற்றும் ஜூலை 

மாதங்களில் தொடங்கக்கூடிய இக்குறுவைப் பட்டத்தில் தமிழகத்தின் கரூர், திருவாரூர், தஞ்சாவூர், திருச்சி, புதுக்கோட்டை மற்றும் ஈரோடு போன்ற மாவட்டங்களிலும், குறுவை சாகுபடி செய்ய ஏற்றப் பருவமாக கருதப்படுகிறது.


நேரடி நெல் விதைப்பு, மற்றும் நாற்று நடுதல் என இரண்டு முறைகளையும் பின்பற்றி பயிரிடப்படும் இந்த நெற்பயிர், நேரடி விதைப்புக்கு 35 கிலோ நெல் விதையும், நாற்று நடவு முறைக்கு 40 நெல்விதையும் தேவைப்படுகிறது. 

4.½ அடி உயரம் வரை வளரக் கூடிய இந்நெல் இரகம், தண்டு துளைப்பான் மற்றும் கதிர்நாவாய்ப்பூச்சி ஆகியவற்றை எதிர்த்து வளரும் ஆற்றலுடையது.

தொடர் நீர்த்தேக்கப் நிலப்பகுதியில் செழித்து வளரக்கூடிய இந்த நெற்பயிரின் அரிசியில்,

தென்னிந்திய உணவாக கருதப்படும் இட்லி, மற்றும் தோசைப் போன்ற சிற்றூண்டிகள் தயாரிக்க ஏற்றதாக கூறப்படுகிறது.

பொதுவாக சிகப்பு அரிசியைப் பார்த்தவுடன் பலர் கூறுவது இது கார் அரிசி என்று.


 பலரின் மனதில் பாரம்பரிய அரிசிகள் பலவற்றை பற்றி தெரிந்திருந்தாலும் சிகப்பரிசியைக் கண்டவுடன் கூறும் வார்த்தை கார் அரிசி என்று.. அப்படியானால் கார் அரிசி என்பதற்கும் சிகப்பரிசிக்கும் என்ன சம்பந்தம்? ஏன் இந்த சிகப்பரிசியை கார் அரிசி என்று பலர் பொதுவாக கூறுகின்றனர் என்ற கேள்வி உள்ளது?

கார் அரிசி என்பது பொதுவாக குறைந்த மாதங்கள் விளையும் சிகப்பரிசி.  பெரும்பாலான இடங்களில் அதுவும் வட தமிழகத்திலும் மற்ற மாவட்டங்களிலும் விளையும் அரிசி ரகம் இது.

அதிக இடங்களில் விளையக் கூடிய சிகப்பரிசி ரகமாக இருந்தது மட்டுமல்லாது குறைந்த மாதம் (சம்பாவைப் போல் ஆறுமாதம் இல்லை) விளைவித்ததாலும் பெரும்பாலான விவசாயிகளுக்கும் மற்றவர்களுக்கும் பரிச்சியமான ரகமாக இருந்தது.காலப் போக்கில் பாரம்பரிய ரகங்கள் பல காணாமல் போனாலும் சிகப்பரிசி என்றவுடன் தங்களுக்கு தெரிந்த கார் அரிசியாக இது இருக்குமோ என்ற பெருமை உணர்ச்சியால் பலர் சிகப்பரிசியைக் கண்டவுடன் கார் அரிசி என்று மலரும் நினைவுகளாக தங்களின் மகிழ்ச்சி உணர்வை வெளிப்படுத்துகின்றனர்.இதனாலேயே இத்தனை பாரம்பரிய சிகப்பரிசிகள் தனித்தன்மை, மருத்துவகுணம், சுவை, பெயருடன் இருந்தாலும் பொதுவாக கார் என்று அழைக்கின்றனர்.


பெருங்கார் அரிசி

சூன்,மற்றும் ஜூலை 

மாதங்களில் தொடங்கக்கூடிய குறுவைப் பட்டத்தில்

விதைத்து 120 நாட்களில் அறுவடைக்கு வரும் அதாவது மழைக்காலமான கார் காலத்தில் விதைக்கும் அரிசி ரகங்களை கார் அரிசி என்பர். 

இந்த கார் அரிசியில் பல பல ரகங்களும் உள்ளது.


உதாரணத்திற்கு பாரம்பரிய கார் அரிசி, குள்ளக்கார் அரிசி, பூங்கார் அரிசி, கருத்தக் கார் அரிசி, சித்திரைக்கார்,

பெருங்கார் என பல உள்ளது.

பெருங்கார் அரிசி சத்துக்கள்

சிகப்பரிசியான பாரம்பரிய பெருங்கார் அரிசி பல பல மருத்துவகுணம் கொண்டது. நார்ச்சத்து, சிறிது புரதம், பல தாது உப்புக்களும், வைட்டமின் சத்துக்களும், சுண்ணாம்பு, இரும்பு சத்தும் நிறைந்ததாக இருக்கிறது. 

பெருங்கார் அரிசியில் என்ன உணவு தயாரிக்கலாம்?

கார் அரிசி என்றவுடன் புட்டு அரிசி என்ற பொதுக்கருத்து உள்ளது. 

புட்டிற்கு மட்டுமல்லாது மற்ற அனைத்து உணவினையும் இந்த பெருங்கார் அரிசியில் தயாரிக்கலாம்.

இந்த பெருங்கார் அரிசியினை வேகவைத்து  வெங்காயம், கொண்டைக்கடலை, பட்டாணி, மொச்சை, தக்காளி சேர்த்து கடலை சாதம் தயாரித்து கொடுக்க உடலுக்கு தேவையான போலிக் அமிலம் குறையாமல் கிடைக்கும். 

இதனால் உண்பவருக்கு மன அமைதி மட்டுமல்லாது உடலில் விஷப் பொருட்கள் சேராமல் இருக்கும்.

பெருங்கார் அரிசியினை மாவாக அரைத்து அதில் எலுமிச்சை இடியாப்ப சேவை செய்ய குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை விரும்பி உண்பார்கள்.

விருப்பமும் சுவையும் மட்டுமல்ல இதனை உண்பதால் உடலுக்கு தேவையான இரும்பு சத்துக்கள் சீராகப் பெறுவதுடன் இரத்த சோகை, மாதவிடாய் தொந்தரவுகளும் நீங்கும்.

பெருங்கார் அரிசி மூன்று பங்கிற்கு ஒரு பங்கு உளுந்தம் பருப்புடன் சிறிது வெந்தயம் சேர்த்து இட்லி மாவு அரைத்து எட்டு மணிநேரம் புளிக்க வைத்து அதனுடன் தக்காளி சட்னி செய்து உண்ண வயதானவர்களுக்கும் உடல் எலும்புகள் மற்றும்  திசுக்கள் பலம் பெறுகிறது.


இது உடல் மெலிவாக இருப்பவர்களுக்கு நல்ல போஷாக்கையும், சதைப்பற்றையும் அளிக்கிறது. 


அதுமட்டுமல்ல இதனை தொடர்ந்து உண்டுவர 

உடல் தொய்வில்லாமல் புத்துணர்வுடன் காணப்படும்.


பெருங்கார் அரிசியில் சுவையான பிஸிபேளா பாத் தயாரித்து உண்ணலாம்


. சன்ன ரக பாலிஷ் அரிசியிலேயே உணவை உண்ட நமக்கு இந்த அரிசி சாதம் சற்று பெரிதாக தோன்றினால் அரிசியினை ஒன்றும் பாதியுமாக உடைத்தும் பயன்படுத்தலாம்.


இவ்வாறு பெருங்கார் அரிசியினை ஒன்றும் பாதியுமாக உடைத்து அதனுடன் துவரம் பருப்பு, கேரட், பீன்ஸ், பட்டாணி, சின்ன வெங்காயம், தக்காளி சேர்த்து பிஸிபேளா பாத் தயாரிக்க சுவை பிரமாதமாக இருக்கும். 


மேலும் உடலுக்கு தேவையான பல சத்துக்களும் கிடைக்கும்.


இந்த உணவால்  உடலுக்கு தேவையான மக்னீசியம் சத்து, இரும்பு சத்து போன்ற சத்துக்கள் சீராக கிடைக்கிறது. 


உடலில் ஏற்படும் குடல் புழுக்களால் அவதிப்படுவோருக்கு மாமருந்தாக இது அமைகிறது. நோய் எதிர்ப்பு தன்மையையும் அளிக்கிறது. 


இவ்வாறு பல பல உணவுகளை பெருங்கார் அரிசியில் தயாரித்து  உண்ண உடல் பலப்படும். 


பல சத்துக்கள் நிறைந்த இந்த பாரம்பரிய அரிசியினை தொடர்ந்து பக்குவமாக சமைத்தும், கவனமாக சுவைத்தும் பயன்படுத்திவர பல நோய்களுக்கு இது மாமருந்தாகும்.


பெருங்கார் அரிசி என்பது ஒரு வகை பாரம்பரிய ரகம் என்பதையும், சிகப்பாக இருக்கும் அரிசியெல்லாம் கார் அரிசி இல்லை என்பதனையும் மறவாமல், ஒவ்வொன்றிற்கும் தனித்தனி தன்மையும், சுவையும், குணமும் உள்ளது என்பதை புரிந்து கொள்வோம்.

புதிதாக இந்த அரிசியினைப் பற்றி கேள்விப் பட அனைத்தும் ஒன்றைப்போல் தோன்றும் ஆனால் ஒவ்வொன்றும் வெவ்வேறானது.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

Garlic's Healing Powers: A Closer Look at Ayurvedic Wisdom

 Garlic's Healing Powers: A Closer Look at Ayurvedic Wisdom Consuming garlic on an empty stomach is believed to offer numerous health be...