ஆன்மீகம்- குரு
ஆன்மீகம் எல்லோருக்கும் முக்கியமான ஒன்றாகும். ஆனால் குழப்பத்தை தவிர்க்க, ஒருவன் தான் தேர்ந்தெடுத்த ஆன்மீகப் பாதையை முழுமையாக மதிக்க வேண்டும். உதாரணத்திற்காக, உணவை எடுத்துக்கொள்ளுங்கள் , பல நாடுகளில் அதன் சுற்றுப்புற சூழலுக்கு ஏற்ப உணவு வகை வெவ்வேறாக இருந்தாலும் அதனை உண்ணும் மக்களுக்கு ஒரே இலக்கு உயிர் வாழ்வதற்கும், வயிற்றின் பசியை பூர்த்தி செய்யவும் உணவு தேவையாகும். இதுபோலவே ஆன்மீகத்தை பலவகைகளில் பின்பற்றலாம். ஆனால் ஆன்மீகத்தின் பாதையில் செல்லும் ஒவ்வொருவருக்கும் முடிவான இலக்கு ஒன்றே ஆகும். கடவுளை அடைய, சில பூஜைகளை செய்ய விரும்புவார்கள். சிலர் பக்தி பாடல்களை (பஜனைகளை) விரும்புவார்கள். சிலருக்கு யோகா, சிலருக்கு தியானம் இவற்றில் எந்தப் பாதை சரியானது அல்லது இவற்றில் எது மிகத் தவறானது என்று ஒருவன் கேட்கலாம். எல்லா பாதைகளும் சரியானதே. உன்னுடைய மனது எதை விரும்புகிறதோ, அந்தப் பாதையின் வழியில் செல். சில நேரங்களில், பலர் தங்களுடைய குருவிடம் சென்று அவர் காண்பிக்கும் பாதையை பின்பற்றுவர்.
ஆனால் ,வேறொரு குரு கிடைத்து விட்டால், முதல் குருவை விட்டு விட்டு அவரிடம் செல்வார்கள். குருவை அடிக்கடி மாற்றுவதால் பல குழப்பங்கள் நேர வாய்ப்பு ஏற்படுகிறது. மேலும் எந்த வகையிலும் முன்னேற்றம் காண முடியாது. மனதில் சலனம் ஏற்படுகிறது. ஒரு குருவிடம் இருந்து வேறு ஒரு குருவிடம் தாவக்கூடாது. மற்றும் ஒரு குருவோடு மற்றொரு குருவை ஒப்பிடக்கூடாது. மற்றொரு குரு வந்தால் அவரிடமிருந்து ஆசி பெறுங்கள்.அவருடைய போதனைகளை உங்களுடைய குரு கூறுவது போல நினைத்து கேளுங்கள். அவரிடம் உங்களுடைய குருவை காண வேண்டும். இவ்வாறு செய்தால் குழப்பம் நிலவாது. உங்கள் குருவை மற்ற குருவில் பார்த்தால் அவருடைய போதனைகளையும் சரியான வழியில் எடுத்து, ஆன்மீகத்தின் வழியில் செல்ல முடியும்.
இவ்வுலகில் அனைத்து குருவும் நல்லவர்கள்.எந்தப் பாதையிலும் தவறில்லை. எல்லா குருக்களும் கல்கி அவதாரமாக (ஒரு தெய்வீக சக்தி சொர்க்கத்திலிருந்து பூமிக்கு வந்து மனித உருவில் வாழ்கிறது) வந்து வாழ்க்கையின் உண்மைகளையும், கொள்கைகளையும் கற்றுக்கொடுக்க வந்துள்ளனர்.மகான்களின் பாதைகள் வெவ்வேறாக இருந்தாலும்,அனைத்து பாதைகளும் ஒரே இலக்கை போய் எட்டுகிறது -"கடவுள்" ஆன்மீகத்தில் தேர்ந்தெடுக்கும் பாதையில் செல்லவேண்டும். பக்தியை தவறாக உபயோகிக்க கூடாது.
மற்ற குருக்களைப் பற்றி தவறாக பேசக்கூடாது. ஒவ்வொரு குருவும் பிரத்தியேகமானவர்.நாம் வழிபடும் கடவுள் குருவின் வடிவத்தில் வருகிறார். ஆகையால், குருவை பற்றி அவதூறாக பேசினால் கடவுளை அவதூராக பேசுவதற்கு ஒப்பாகும். ஆன்மீகத்தின் பாதையில் அமைதிக்காகவும், சந்தோஷத்திற்காக செல்கிறோம். பல குருக்களையும் கடவுளின் பல்வேறு வடிவங்களாக பார்க்க வேண்டும். நன்மை வெவ்வேறு வழிகளில் அவர்கள் வழி நடத்தினாலும் ஒரே இலக்கை தான் வந்தடையும. மின்சார விளக்கு பலவிதமான சக்திகளில் வரும். ஆனால் அதில் பயன்படுத்தும் மின்சாரம் எல்லாவற்றிலும் ஒரே விதமாக இருக்கும்.
எல்லோரும் தான் விருப்பத்திற்கு ஏற்ப குருவை தேர்ந்தெடுத்து அவரது போதனைகளை பின்பற்ற வேண்டும். நீ விரும்பிய இந்தப் பாதையை கடைசிவரை பின்பற்றி வாழவேண்டும். உன்னுடைய நண்பர்கள் கூறுவதை கேட்காமல், உன் மனதில் ஒலிக்கும் குரலை கேட்டு அதன்படி நடந்து உனது குருவின் பாதையில் செல்ல வேண்டும். அப்போதுதான் ஆன்மீகத்தின் பாதையில் முன்னேற முடியும்.
எல்லோரும் தான் விரும்பிய ஆன்மீகப் பாதையைத் தேர்ந்தெடுத்து, இறுதிவரை அதனைப் பின்பற்றி, கடவுளாகிய இலக்கை அடைய குருவின் அருளை பெற வேண்டும்.
🙏நன்றி நன்றி நன்றி🙏
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக