மோடி தலைமையில் நடந்த முக்கிய கூட்டம்; பிட்காயினுக்கு வருகிறதா தடை?
பிரதமர் மோடி தலைமையில் நேற்று டெல்லியில் ஒரு முக்கியமான கூட்டம் நடந்தது. கிரிப்டோகரன்ஸியை இந்தியாவில் வர்த்தகம் செய்வதற்கு தடை விதிக்கலாமா என இந்தக் கூட்டத்தில் விவாதிக்கப்பட்டது.
கோவிட் 19-க்குப் பிறகு கிரிப்டோகரன்ஸியில் நம் மக்கள் அதிகமாக பணம் போட்டு வருவதைப் பார்த்து நமது மத்திய அரசும் ஆர்.பி.ஐ-யும் கலகலத்துப் போயிருக்கிறது.
இந்த கிரிப்டோகரன்ஸி மூலம் தீவிரவாதிகளுக்கு நிதி ஆதரவு கிடைக்கக்கூடாது என்பதுடன், இதில் பணத்தைப் போட்ட மக்கள் அதை இழந்துவிடக்கூடாது என்றும் நினைக்கிறது. ஆனால் சர்வதேச அளவில் வர்த்தகமாகிவரும் கிரிப்டோகரன்ஸியினை இந்தியாவில் மட்டும் தடை செய்வ்து எப்படி என்று தீவிரமாக யோசித்து வருகிறது. காரணம், சில ஆண்டுகளுக்கு முன்பு, கிரிப்டோகரன்ஸி வர்த்தகத்துக்கு மத்திய அரசு மறைமுகமாக சில நிபந்தனை விதித்து, கிரிப்டோ பரிவர்த்தனையை நிறுத்தியது. ஆனால், இதை உச்ச நீதிமன்றம் ஆட்சேபித்து, கிரிப்டோ வர்த்தகத்துக்கு அனுமதி தந்தது.
கிரிப்டோ வர்த்தகத்துக்கு இன்னொரு முறை தடை கொண்டுவந்தால், அது யாராலும் தடுக்க முடியாதபடி இருக்க வேண்டும் என மத்திய அரசு நினைக்கிறது. அதற்காகத்தான் இப்போது பிரதமர் மோடி தலைமையில் கூட்டம் நடந்துள்ளது.
இந்தக் கூட்டத்துக்குப் பிறகு, கிரிப்டோகரன்ஸி வர்த்தகம் செய்வதற்கு பலப்பல நிபந்தனைகள் விதிக்கப்படலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது. கிர்ப்டோகரன்ஸியில் பணத்தைப் போட்டவர்கள் கொஞ்சம் ஜாக்கிரதையுடன் இருப்பது நல்லது.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக