கிரிப்டோகரன்சிகளுக்கான ஆதாரவுகள் ஒரு புறம் பெருகி வரும் நிலையில், இந்தியாவில் இது குறித்தான கட்டுப்பாடுகள் வரலாமோ என்ற அச்சம் நிலவி வருகின்றது.
எனினும் அமெரிக்காவில் கிரிப்டோகரன்சிகளுக்கான ஆதரவு என்பது தொடர்ந்து அதிகரித்து வரும் நிலையில், இது எதிர்காலத்தில் தங்கத்திற்கு மாற்றாக இருக்கலாமோ? என்ற அச்சமும் இருந்து வருகின்றது.
ஏனெனில் இன்று வரையில் இந்த டிஜிட்டல் நாணயங்களுக்கு சரியான அடித்தளம் என்பது கிடையாது. அதிகாரப்பூர்வமான மையப்படுத்தப்பட்ட எக்ஸ்சேஞ்ச் என்று எதுவும் கிடையாது. எனினும் எல்சல்வடா என்னும் சிறிய நாடு சமீபத்தில் இதனை அதிகாரப்பூர்வ நாணயமாக அறிவித்தது. அதே நேரம் இன்று உலகின் முதன்மை பொருளாதார நாடாக இருக்கும் சீனா தடை செய்துள்ளது.
ஆனால் இவற்றில் எதனையும் எதிர்பாராது கிரிப்டோகரன்சி சந்தையானது நாளுக்கு நாள் மக்கள் மத்தியில் ஊடுருவி வருகின்றது. அதெல்லாம் சரி தற்போதைய நிலையில் முக்கிய கிரிப்டோக்களின் நிலவரம் என்ன? வாருங்கள் பார்க்கலாம்.
பிட்காயின் மதிப்பானது சற்று அதிகரித்து, 60,423 டாலர்களாக காணப்படுகிறது. கடந்த 24 மணி நேரத்தில் இதன் அதிகபட்ச விலை 61,381.30 டாலர்களாகும். இதே இதன் குறைந்தபட்ச விலை 58,441.91 டாலர்களாகும். நடப்பு நிதியாண்டின் தொடக்கத்தில் இருந்து 103.96% ஏற்றத்தில் தான் காணப்படுகிறது.
இதே எத்தரியத்தின் மதிப்பானது தற்போது 1.25% குறைந்து, 4,215.38 டாலர்களாக காணப்படுகிறது. கடந்த 24 மணி நேரத்தில் இதன் அதிகபட்ச விலை 4,347.45 டாலர்களாகும். இதே குறைந்தபட்ச விலை 4,069.68 டாலர்களாகும். நடப்பு நிதியாண்டின் தொடக்கத்தில் இருந்து 460.39% ஏற்றத்தில் தான் காணப்படுகிறது.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக