வியாழன், 11 நவம்பர், 2021

Bitcoin

 

அரசு, தனியார் ஊழியர்களுக்கு பிட்காயினில் சம்பளம்.. புதிய சட்டம்!

ஊழியர்களுக்கு கிரிப்டோ கரன்சியில் சம்பளம் வழங்க முன்மொழிந்து பிரேசிலில் மசோதா தாக்கல்.

எல் சால்வடோர், மியாமி, பாரிஸ் மற்றும் நியூயார்க் நகரத்தை தொடர்ந்து பிரேசில் நாட்டிலும் பிட்காயின் ஏற்புக்கான சட்டம் தொடர்பான மசோதாவை அந்நாட்டின் காங்கிரஸ் உறுப்பினர் கவுலார்ட் (Luizão Goulart) தாக்கல் செய்துள்ளார்.

அதன்படி பிரேசிலில் இருக்கும் தனியார் மற்றும் அரசு ஊழியர்கள் அவர்களுக்கான ஊதியம் மற்றும் இழப்பீட்டுத் தொகையை பிட்காயின் மூலம் வழங்குமாறு சம்பந்தப்பட்ட நிறுவனக்களிடம் கோரிக்கை வைத்து பெறலாம் எனவும் கூறப்பட்டுள்ளது.

பிரேசிலில் உள்ள தனியார் மற்றும் அரசு நிறுவனங்களும் எக்காரணத்தைக் கொண்டும் அவர்களின் ஊழியர்களை அவர்கள் சம்மதமின்றி பிட்காயினில் ஊதியம் அல்லது இழப்பீடுகளை பெற வற்புறுத்தக் கூடாது எனவும் அந்நாட்டு அரசு வலியுறுத்தியுள்ளது.

மேலும், ஊதியத்தில் 30 சதவிதம் பிட்காயினாகவும் மீதமுள்ள தொகையை பணமாகவும் பெறலாம் என காங்கிரஸ் உறுப்பினரான லூயிஸ் கவுலார்ட் கூறியுள்ளார்.

இந்த மசோதா ஏற்றுக்கொள்ளப்படுமா என்பதைக் குறித்து தெளிவான பதிலில்லை. ஆனால், பிரேசிலில் உள்ள சுமார் லட்சக்கணக்கான மக்கள் கிரிப்டோகரன்சியை வைத்துள்ளதாகவும், 21 பிட்க்கயின் ஏடிஎம்கள் பிட்காயின் வர்த்தகத்திற்காக அமைக்கப்பட்டுள்ளாதகவும் அவ்வறிக்கையில் கூறப்பட்டுள்ளது.

அதுமட்டுமின்றி ஷெர்லாக கம்யூனிகேஷன்ஸ் எனும் நாளிதழல் சமீபத்தில் கிரிப்டோகரன்சிக்கான ஆதரவுகள் மற்றும் எதிர்ப்புகள் குறித்து கணக்கெடுப்பு எடுத்ததில் பிரேசிலைச் சேர்ந்த 48 சதவீத மக்கள் கிரிப்டோவிற்கு ஆதரவாக கருத்து தெரிவித்துள்ளனர்.click here

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

Garlic's Healing Powers: A Closer Look at Ayurvedic Wisdom

 Garlic's Healing Powers: A Closer Look at Ayurvedic Wisdom Consuming garlic on an empty stomach is believed to offer numerous health be...