சனி, 6 நவம்பர், 2021

Health and Beauty

 

வைட்டமின் E எண்ணெய் பயன்படுத்தி இத்தனை சரும பிரச்சனைகளை சரி செய்யலாமா..? நீங்களும் டிரை பண்ணுங்க..!

வைட்டமின் E கேப்ஸ்யூலில் மஞ்சள் சேர்த்து குழைத்து கரும்புள்ளிகள் இருக்கும் இடங்களில் தடவி 15 நிமிடங்கள் கழித்து கழுவுங்கள். இவ்வாறு செய்ய கரும்புள்ளிகள் மறையும்.
வைட்டமின் E எண்ணெய் பயன்படுத்தி பல அழகுக் குறிப்புகளை செய்யலாம். அதனால் நமக்குக் கிடைக்கும் பலன்களும் அதிகம். அவை என்னென்ன பார்க்கலாம்.
பிரைட் ஃபேஸ் : காஃபி தூள், வைட்டமின் E எண்ணெய் மற்றும் சர்க்கரை மூன்றையும் கலந்து முகத்தில் வட்டப்பாதையில் ஸ்கிரப் செய்ய இறந்த செல்கள், அழுக்குகள் நீங்கி முகம் பளபளக்கும்.

சுருக்கள் மறையும் : இரவு தூங்கும் முன் வைட்டமின் E கேப்ஸ்யூல் ஒன்றை முகத்தில் தேய்த்து 15 நிமிடங்கள் மசாஜ் செய்துவிட்டு படுத்துவிடுங்கள். மறுநாள் காலை கழுவுங்கள். இவ்வாறு செய்து வர சுருங்கிய தோல்கள் இறுகி இளமையான தோற்றம் கிடைக்கும்.

கருவலையங்கள் மறைய : கண்களை சுற்றி கருவலையங்கள் இருந்தால் இரவு தூங்கும் முன் கண்களை சுற்றி மசாஜ் செய்துவிட்டு அப்படியே தூங்கிவிடுங்கள். தொடர்ந்து 3 நாட்கள் செய்ய கருவலையங்கள் நீங்கும்.

அடர்த்தியான புருவம் : இரவு தூஉங்கும் முன் வைட்டமின் E எண்ணெய்யை புருவத்தில் தேய்த்து மசாஜ் செய்யுங்கள். பின் அப்படியே தூங்கிவிட்டு மறுநாள் காலை கழுவுங்கள். இவ்வாறு தொடர்ந்து செய்ய அடர்ந்தியான புருவங்களைப் பெறலாம்.

வறட்சி நீங்க : கை கால்கள் வறட்சியாக இருந்தால் குளித்துவிட்டு வைட்டமின் E எண்ணெய்யை மாய்ஸசரைசர் போல் தடவுங்கள். தோல் மென்மையாக இருக்கும். எண்ணெய் பிசுக்கு இருக்காது.

முடி பராமரிப்பு : தலைக்கு தேங்காய் எண்ணெய் தடவும்போது அதனுடன் வைட்டமின் E எண்ணெய்யை கலந்து தடவ எந்த தலைமுடிப் பிரச்னையும் எட்டிப்பார்க்காது.



கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

Garlic's Healing Powers: A Closer Look at Ayurvedic Wisdom

 Garlic's Healing Powers: A Closer Look at Ayurvedic Wisdom Consuming garlic on an empty stomach is believed to offer numerous health be...