சனி, 9 அக்டோபர், 2021

பசு வதை* *தவிர்ப்போம்

 




பசு வதை தவிர்ப்போம்*!

*கோ மாதாவின் கடன் தீர்ப்போம்*!

ஒரு நாள் பசுவதை செய்யும் இடத்தில் ஒருவன் கோமாதாவை ஸம்ஹாரம் செய்வதற்கு வந்தவுடன் கோமாதா அவனை பார்த்து சிரித்தது.

அதை பார்த்து அவன் கேட்டான். நான் உன்னை ஸம்ஹாரம் செய்ய வந்துள்ளேன், அது தெரிந்தும் கூட நீ எதற்காக சிரிக்கின்றாய்? என்றுகேட்டான்.

அப்பொழுது கோமாதா சொன்னது. நான் எப்பொழுதும் மாமிசத்தை உண்டதில்லை. ஆனாலும் என் மரணம் மிகவும் கோரமாக இருக்கப் போகிறது.

எந்த தப்பும் செய்யாமல், யாருக்கும் எத்தகைய ஆபத்தையும் விளைவிக்காத என்னை, நீ கொன்று, என் மாமிசத்தை சாப்பிடும் உன் மரணம் எவ்வளவு கோரமாக இருக்குமோ என்று நினைத்து நான் சிரித்தேன்.

பால் கொடுத்து உங்களை வளர்த்தேன். உங்கள் பிள்ளைளுக்கு பால் கொடுக்கிறேன்.

ஆனால் நான் சாப்பிடுவது புல்லை மட்டுமே. 

பாலிலிருந்து வெண்ணை எடுத்தீர்கள். வெண்ணையினால் நெய்யை செய்தீர்கள்.

என்னுடைய சாணத்தினால் வறட்டி செய்துசமையலுக்கு உபயோகித்தீர்கள்.

அதே போல் என்னுடைய சாணத்தினால் எருவினை தயார் செய்து விவசாயத்திற்கு பயன்படுத்தீனீர்கள்.

அந்த பணத்தினால் இன்பமான் வாழ்க்கையை வாழ்கிறீர்கள். ஆனால் எனக்கு மட்டும் அழுகிப் போன காய்றிளையும் காய்ந்து போன புல்லையும் தந்தீர்கள்.

என்னுடைய சாணத்தினால் கோபர் கேஸ் தயார் செய்து கொண்டு உங்கள் வீட்டை இருட்டிலிருந்து வெளிச்சத்திற்கு கொண்டு வந்தீர்கள்.

ஆனால் என்னை கசாப்புக்காரன் போல் கொல்ல வந்திருக்கிறாய்...

என்னுடைய பாலிலிருந்து கிடைத்த சக்தியினால் தான் என்னை கொல்ல உன்னால் ஆயுதத்தை தூக்க முடிந்தது.

அந்த ஆயுதத்தை தூக்கும் சக்தி உனக்கு கிடைத்தது என்னால் தான்.

என் மூலம் நிறைய சம்பாதித்து வீட்டை கட்டிக் கொண்டாய். ஆனால் என்னை மட்டும் ஒரு குடிசையில் வைத்தாய்.

உன்னை பெற்ற தாயை விட மேலாக உனக்கு அண்டையாக இருந்தேன்.

ஸ்ரீக்ருஷ்ண பகவானிற்கு ப்ரீதியானவள் நான்.

எனக்கு இவ்வளவு பெரிய தண்டனை கொடுக்கும் உன் கதி என்னவாகும்?

உன் வருங்காலத்தை குறித்து நினைத்து நான் சிரித்தேன் என்று சொன்னது.

(உங்களால் முடிந்த அளவு இதை எல்லோருக்கும் பகிர்ந்து கோமாதாவின் ருணத்தை (கடன்) தீர்த்து கொள்ளவும்)

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

Garlic's Healing Powers: A Closer Look at Ayurvedic Wisdom

 Garlic's Healing Powers: A Closer Look at Ayurvedic Wisdom Consuming garlic on an empty stomach is believed to offer numerous health be...