பிட்காயின் என்றால் என்ன?
பிட்காயின் என்பது கண்ணில் பார்க்க முடியாத அனைத்து நாடுகளுக்கும் பொதுவான பணம். இணையத்தில் மட்டுமே பரிமாறப்படும் பணம். இதை வைத்துக் கொண்டு ஆன்லைனில் ஷாப்பிங் செய்யலாம்.
இந்த நாணயத்தின் மதிப்பை எந்த ஒரு நாட்டாலும் நிர்ணயம் செய்ய முடியாது. அதாவது ஒரு நாட்டின் வர்த்தக வீழ்ச்சியால் இந்த நாணயத்தின் மதிப்பு சரிந்துவிடும் என்று கூறுவதற்கு இல்லை
பிட்காயினை வாங்க, விற்க வேண்டும் என்றால் அந்த அந்த நாட்டின் பிட்காயின் மாற்று அமைப்புக்கான இணையதளத்தில் கணக்கு இருக்க வேண்டும். இதற்காக நமது நாட்டில், Unocoin - www.unocoin.com , Zebpay - www.zebpay.com , Bitxoxo - www.bitxoxo.com, Coinsecure - www.coinsecure.in ஆகிய இணையதளங்கள் உள்ளன. இந்த இணையதளங்களில் கணக்கு வைத்துக் கொள்ள எந்தக் கட்டணமும் இல்லை.